கருங் கழுகு (Black Eagle)





        கடந்த மாதம்  இயற்கை நண்பர்களுடன், கோத்தகிரிக்கு அருகே உள்ள குஞ்சபனை காட்டிற்கு, கானுலா சென்று இருந்தோம். பல்வேறு பறவைகளை பார்த்தோம், குறிப்பாக அடர்ந்த கானகத்தில் மட்டுமே காணப்படும் கருங் கழுகு (Black Eagle) எங்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் நாட்டு கழுகுகளில் கருங் கழுகு பெரியது, சுமார் 75 செ.மீ நீளமுள்ளது.   இக்கழுகு சிறு பறவைகளையும், ஓணான், பாம்பு,அரணை போன்ற ஊர்வனவற்றையும், பறவைகளின் முட்டை, பறவைக் குஞ்சுகள் போன்றவற்றையும்  வேட்டையாடி உண்ணும். இக் கழுகு இருக்கும் காட்டில், இதன் உணவுக்கான உயிரினங்கள் சிறப்பாக வாழ்கிறது என்று இயற்கை அறிவியல் கூறுகிறது. இயற்கை சமன் பாட்டை நிலை நிறுத்துவதில் கழுகுகளின் பங்களிப்பு சிறப்பானது,கருங் கழுகுகளின் சிறப்பும்,அதன் வாழ்வியலும், இயற்கை சமன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
                                      கருங் கழுகுகளின் சிறப்பை கேட்டு அறிந்த Times of India நிருபர் திருமதி சாந்தா தியாகராஜன்   அவர்கள், எங்களிடம் பேட்டி எடுத்தார். செய்தி கடந்த 20-8-2012 அன்று Times of India வில் செய்தியாக வெளி வந்தது.  

No comments

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Powered by Blogger.