இயற்கையை மதிப்போம், கானக உயிரினங்களை காப்போம், காட்டுயிர்கள் அழிவுக்குள்ளாவதை தடுப்போம் !

Dec 2, 2015

பிளிச்டர் வண்டுகள் (Blister beetle)

Orange Blister beetle  அல்லது Blister beetle என்றழைக்கப்படும் வண்டுகள், மெலாய்டே(Meloidae) குடும்பத்தை சேர்ந்தது. மெலாய்டே குடும்பத்தை சார்ந்த வண்டுகள், உலகில் இதுவரையில் 7500 வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. பிளிச்டர் வண்டுகள், தங்களின் தற்காப்புக்காக கேந்தரிடின் (cantharidin) என்கிற வீரியமுள்ள நச்சு இரசாயனத்தை சுரந்து எதிரிகளிடம் பீச்சி அடிக்கிறது. இத்திரவம் மனிதர்களின் தோல் மீது பட்டால், ஒவ்வாமை அல்லது கொப்பளம் ஏற்பட வாய்ப்புண்டு. கேந்தரிடின் வேதியியல் உள்ள மூலக்கூறு, மனிதர்களின் உடலில் ஏற்படும் மருகளை நீக்க மருத்துவத்தில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இயற்கை உயிரிகளிருந்து கிடைக்கும் பல்வேறு வேதிப்பொருள்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இதில் மனித குலமே பெரும்பாலும் பயனடைகிறது. மனிதர்களால் மற்ற உயிர்களுக்கு எந்த நன்மையையும் இருப்பதாகத் தெரியவில்லை.  

No comments:

Post a Comment

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Face Book -post 1

Face Book- post 2

FACE BOOK- POST 4

Face book -Post 3

Face Book - Post 5