இயற்கையும் நண்பரும்.......... (White-rumped Vulture)

           

                                                
                                             நம் நாட்டில் ஒன்பது வகையான பிணந்தின்னி கழுகுகள் உள்ளன. அதில் நான்கு வகைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இறந்த விலங்குகளை தின்று மறுசுழற்சி செய்து சுற்று சூழலை பேணி காப்பதால், இயற்கையில் இப்பறவைகளின் பங்களிப்பு மகத்தானது.காடும்,காடு சார்ந்த பகுதிகளும் செழிக்கவும், இவை சாப்பிடும் மிச்சங்களால் கிடைக்கும்  எச்சங்களால் மண்ணில் நுண்யுயிர் வளம் பெருக துணை புரிகின்றன. இறந்த உயிரினங்களின் உடல்களையும், மற்ற விலங்குகள் தின்று விட்டு போன மிச்சங்களையும் உண்பதால் இவற்றை பிணந்தின்னிக் கழுகுகள் என்று பொதுவாக அழைக்கபட்டாலும்,  சங்க இலக்கியங்களில் பாறுகள்  என்ற பதிவும், பழங்குடி மக்கள்களில் சிலரும் இவற்றை "பாறுக்கழுகுகள் " என்று அழைக்கப்படுவதும் மிக பொருத்தமாக இருக்கின்றன. 
                                                   
                                      இந்த பாறுக்கழுகுகள் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு வரை மனிதர்கள் வாழும் கிராம பகுதிகளில் இறந்து கிடந்த விலங்குகளை உண்பதற்கும், சுற்றுசூழல் துப்புரவுகளாக பரவலாக காணப்பட்டன. இன்றைக்கு அழிந்து வரும் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டது. காரணம் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு போடப்படும் வலிநீக்கி மருந்தான (Diclofenac) டை குளோப்பினாக் தான் என்பதை உலகம் முழுவதும் உள்ள ஆராய்சியாளர்கள் உறுதிப்படுத்தி, பத்து ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டது. நம் நாட்டில் தடை செய்யப்பட்டு ஆறு  வருடங்கள் ஆனாலும் இன்றைக்கும் கால்நடை மருத்துவர்களால் பரவலாக பயன்படுத்தபடுகிறது. ஏழை எளிய மக்கள் நிறைந்த நம் நாட்டில், மனிதர்களே குறைந்த செலவில் மருத்துவம் நாடி, தேடிப் போகும் போது,  தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு அதிக விலையுள்ள மருந்துகளை வாங்கும் நிலைமை இல்லாத போது, டை குளோப்பினக் (Diclofenac) போன்ற மருந்துகளை எளிதில் பயன்படுத்துகின்றனர்.  மக்களிடம் ஏற்ற தாழ்வுகளும், அறியாமையும் மிகுந்துள்ள நிலையில், மறுபுறம் இயற்கையை காப்பாற்றுவது போன்ற சிக்கலான நிலைகளில் நண்பர் பாரதிதாசன் போன்ற இயற்கைவாதிகளின் சேவை மற்றும் களப்பணிகள் சாதாரணமானது அல்ல. 

12-2-2013 The Hindu  நாளிதழில் வந்த செய்தி
 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vulture-population-stabilising-in-moyar-valley/article4405915.ece


 The Hindu : NATIONAL / TAMIL NADU : Vulture population stabilising in Moyar Valley

No comments

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Powered by Blogger.