இயற்கையை மதிப்போம், கானக உயிரினங்களை காப்போம், காட்டுயிர்கள் அழிவுக்குள்ளாவதை தடுப்போம் !

Dec 5, 2012

Common Jezebel (Delias eucharis)


            கண்ணை கவரும் ஜெசபெல் (Common Jezebel- Delias eucharis) என்னும் வண்ணத்துப்பூச்சி, இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மரங்கள் அடர்ந்த காடுகளிலும், சமவெளிகளிலும் சாதாரணமாக காணப்படும் இவ்வண்ணத்துப் பூச்சிகள் சுமார் 7000அடி உயரத்தில் உள்ள பகுதிகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
              
      இவை பொதுவாக தோட்டங்களிலும், திறந்த வெளி காடுகளிலும், இரை தேடி மரங்கள் இடையே பறப்பதை காணலாம். அதன் இறக்கைகளில் மேல் புறம் கருப்பு இலைகளில் வெள்ளை மலர் சிறுதூவிகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டது போல் காணப்படும். அடிப்புறம் மஞ்சள் மலரில், சிவப்பு சிறுதூவிகள் ஓரங்களில் அடுக்கப்பட்டிருக்கும். ஜெசபெல் வண்ணத்துப்பூச்சிகள் உயரமாக பறந்து திரியும், மலர்களில் தேன் குடிக்க மட்டும் தாழ்வாக பறக்கும்.    
 

No comments:

Post a Comment

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Face Book -post 1

Face Book- post 2

FACE BOOK- POST 4

Face book -Post 3

Face Book - Post 5