இயற்கையை மதிப்போம், கானக உயிரினங்களை காப்போம், காட்டுயிர்கள் அழிவுக்குள்ளாவதை தடுப்போம் !

May 11, 2012

பறவைகளை பார்த்தல் (Bird Watching)


பறவைகளை பார்த்தல் (Bird Watching) மனதிற்கு மகிழ்ச்சியையும், அறிவிற்கு விருந்தாகவும் அமைகின்ற நிகழ்ச்சி. பறவைகளை பார்க்கின்ற பழக்கம் நம்மிடம் பெரும்பான்மையோரிடம் இல்லை. ஆனால் நம்மை சுற்றி 1330 வகை தொகை பறவைகள் இந்திய துணை கண்டத்திலும், தமிழகத்தில் 300 க்கும் மேற்பட்ட பறவைகளும் இருக்கின்றன. நகர் புறத்தில், நாம் வாழும் பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட வகைகளையும் (species) , கிராம புறம் என்றால் 30 க்கும் மேற்பட்ட வகைகளை சாதாரணமாக பார்க்க முடியும். நம் மக்களில் எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கிறது? மற்ற பொழுது போக்கு அம்சங்களில் கவனத்தை செலுத்தும் நாம், இயற்கையான பறவைகளை பார்த்தல் விசயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. மனதிற்கும் மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் உண்டாக்கும் இது போன்ற இயற்கையான பொழுது போக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் மனபூர்வமாக ஈடுபட்டால் தான், இயற்கை பற்றியான பிரச்சனைகளில் பொது அறிவு உண்டாகும், சுற்று சூழல் பிரச்சனைகளில் தீர்வு ஏற்படும்.

No comments:

Post a Comment

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Face Book -post 1

Face Book- post 2

FACE BOOK- POST 4

Face book -Post 3

Face Book - Post 5