Black Headed Ibis
















இயற்கைவாதிகளை பொதுவில் ஐந்தாக வரிசைபடுத்தலாம். 1. வேட்டைக்காரர் 2. ஆராய்ச்சிகாரர் 3. ஆர்வலர் 4. விரும்பிகள் 5. அன்பர்கள் என்று. வேட்டைக்காரர்: காடுகளில் சுற்றித் திரிந்து, விலங்குகளை , பறவைகளை வேட்டையாடுவதில் திறமைகளை வெளிப்படுத்தி பெருமை காண்பவர். ஆராய்சிகாரர் :
பல்கலைகழகங்களில் பட்ட மேற படிப்புக்காகவும் , அவற்றின் அடிப்படையில் வேலை வாய்ப்பும் பெறுவர். ஆர்வலர் : சுற்றுசுழல், இயற்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் பற்று வுடையவர். அடுத்து விரும்பிகள் : இயற்கையின் வரலாற்று அடிப்படையை ப்புரிந்து நுகர்ந்து இயற்கை வளம காத்திடும் பொருட்டு எவ்வகை பரிமாணங்களையும் எதற்கும் விட்டுக் கொடுக்காதவர். அன்பர்கள் : அறம் சார்ந்து காடுகளால் மன வளமும், நிம்மதியும், இன்பமும் பெற விழைபவர்கள்.

நன்றி : இயற்கை செய்திகள் சிந்தனைகள் நூலில் பக்கம் 137



1857 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கன்கார்ட் என்ற சிற்றூரில் பிறந்த டேவிட் ஹென்றி தோரோ இயற்கையை கூர்ந்து கவனிப்பவர், தனிமையில் இனிமை காண்பவர், காட்டில் வசிப்பதில் விருப்பம் கொண்டவர், எளிய வாழ்வின் பிரசாரகர், கவிஞர், ஆங்கில உரைநடையில் வல்லுநர், அரசாட்சி எதிர்ப்பாளர் என்று புகழப்படும் இவர் ௧௮௪௯இல் எழுதிய சட்ட மறுப்பு என்ற நூல் உலக புகழ் பெற்றது. கோடிக்கணக்கான மக்களைப பாதித்தது, சோதித்து அவர்களை சிந்தனையாளர்களாக மாற்றியது. காந்தியடிகள் கூட தனது புதிய போராட்டக் கருத்தியலான சத்யாகிரகம் என்பதை எந்த சட்ட மறுப்பு நூலிலிருந்தே பெற்றார். கல்வி, சம்பாத்தியம், உழைப்பு, ஆகிய எதையும் தோரோ விரும்பவில்லை.

மனம் போன போக்கில் காடுகளில் சுற்றித்திரிவதில் மட்டுமே சுகத்தை கண்டார். இயற்கைக் காட்சிகளின் வர்ணனை, விலங்கினம், புற சூழலின் வரலாறு, வனவாசம், சமூக வாழ்வின் நுனிப்புல் மேயா தன்மை, விமர்சனம் ஆகிய உலகம் முழுமைக்கும் தேவையான புரட்சிகரமான தொரு வாழ்வியல் கருத்துக்களைக் கொண்ட வால்டன் அல்லது காட்டு வாழ்க்கை என்று தோரோ எழுதிய நூல் 1867ல் வெளி வந்து உலக இலக்கியத்தில் ஒரு புதிய தடம் பதித்தது.

நன்றி : இயற்கை :செய்திகள் சிந்தனைகள் நூல் பக்கம் 138

 







No comments

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Powered by Blogger.